சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் தவறான பாதையில் காரை இயக்கிச் சென்ற 38 வயது கார் ஓட்டுநர் இன்று (2ஆகஸ்ட்) கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, கடந்த வாரம் புதன் கிழமை ( 30 ஜூலை) அன்று காலை 9:30 மணியளவில் டாம்பனிஸ் அவென்யூ 5 மற்றும் டாம்பனிஸ் சென்ட்ரல் சாலை சந்திப்பில் ஒரு கார் விபத்து ஏற்பட்டதாகவும் இவ்விபத்தில் ஒரு காரும் லாரியும் மோதிக்கொண்டன. மேலும், பாதசாரி ஒருவர் விபத்துக்குள்ளானதாகவும் கூறினர்.
இந்த தகவலானது, சிங்கப்பூர் சாலைகள் accident.com என்ற வலைத்தளம் மூலமாக பேஸ்புக்கில் வீடியோ பதிவாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவில், போக்குவரத்து விதிகளுக்கு எதிராக ஒரு நபர் வெள்ளை நிற கார் ஓட்டிச் சென்று, பாதசாரி ஒருவர் சாலையைக் கடக்கும் போது அவர் மீது மோதிவிட்டு சென்றது.
பின்னர், சிவப்பு விளக்கை மீறி எதிர்பாதையில் சென்று, பச்சை விளக்குக்காகக் காத்திருந்த ஒரு லாரி மீது மோதியது. பின்னர், காரின் ஏர்பேக் விரிவடைந்து வீடியோ பதிவை சீர்குலைத்து விட்டது.
மேலும், அந்த வீடியோ பதிவில் ஒரு ஆண் ஆம்புலன்ஸை அழைப்பதாக கூறுவதைக் கேட்கலாம். விபத்துக்குப் பிறகு மீண்டும் அந்த காரை இயக்க ஓட்டுநர் முயன்றார்.
விபத்துக்குள்ளான 60 வயதுடைய ஆண் பாதசாரி ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், 38 வயதுடைய ஆண் ஓட்டுநர் ஒருவர் ஆபத்தான முறையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதற்காகவும் இவர் கைது செய்யப்பட்டார்.
விபத்துக்குள்ளான 60 வயதுடைய ஆண் பாதசாரியை சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு நபர்களும் சிறிய காயத்துடன் இருந்ததாகவும் மேலும் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மறுத்து விட்டனர் என சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மதிப்பிட்டனர்.
விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறினர்.