சர்ச்சையை கடந்து, சட்ட மேடையில் அடியெடுத்து வைக்கும் அரிஃபின்...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் வலைத்தளம் Wake Up Singapore (WUSG) நிறுவனரும், 2025 பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர், வரும் ஆகஸ்ட் 13 அன்று வழக்கறிஞராக பதவியேற்கிறார்.
அரிஃபின், 2022 மார்சில் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த ஆண்டு குற்றவியல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு $8,000 அபராத தொகை விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் பின் அவர் கட்டுரையை நீக்கி, மருத்துவமனைக்கு மன்னிப்பு கூறி, காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்தார்.