செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!!

செலேத்தார்(SLE) விரைவு சாலை வழியாக செல்லும் வாகனங்களின் கவனத்திற்கு!!

செலேத்தார் விரைவுச் சாலையில்(SLE) எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் இரண்டு பேர் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தானது இரவு 10:10 மணி அளவில் செலேத்தார் விரைவுச் சாலையில்(SLE) இருந்து மத்திய விரைவு சாலைக்கு(CTE) லெட்டர் அவென்யூ வழியே வெளியேறும் பாதைக்கு முந்தைய சாலையில் நிகழ்ந்ததாகவும் தெரிய வருகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் கனத்த மழை பெய்து கொண்டிருந்ததாகவும் அதனை அடுத்து பலத்த காற்று வீசியதாகவும் தெரியவருகிறது.

அந்த நேரத்தில் திடீரென சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் அவை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனால் பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சாலையில் தவறி விழுந்துள்ளனர்.

இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமைக்கு அனுப்பப்பிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வை, பதிவாக பேஸ்புக்கில் தளத்தில் பயணர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளியின் அடிப்படையில் இந்த விபத்தானது இந்த மாதம் 24 (OCT-2025) ஆம் தேதி நடந்ததாக சிவில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கவனமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.