சிங்கப்பூர்: யிஷூனில் உள்ள ஒரு சந்திப்பில் இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்து செப்டம்பர் இரண்டாம் தேதி இரவு யிஷூன் தெரு 52 சந்திப்பு நடந்தது.
இதனால் மதிப்பு மிக்க லம்போர்கினி சூப்பர் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.
இந்த விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. விபத்துக்கு பிறகு இரண்டு கார்களின் முன் பக்கமும் மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளதை வீடியோ பதிவில் தெளிவாகியுள்ளது.