20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் ஏற்பட்ட சாலைச் சரிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூலை 26 ஆம் தேதி மாலை சுமார் 5.50 மணியளவில், ஒரு பெண் ஓட்டுநர் தனது காரில் அந்தச் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சாலை திடீரென இடிந்து விழுந்தது.
காருடன் அந்த பெண்ணும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அதே நேரத்தில் அருகிலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விரைந்து செயல்பட்டு கயிறுகளை வீசி, அந்த பெண்ணை மீட்டனர்.