சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!!

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் “நிழல் கப்பல்கள்” சிங்கப்பூர் நீரில் அதிகரித்து வருவதாக கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூர் ஜலசந்தியில் குறைந்தது 27 நிழல் கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இக்கப்பல்கள் அடையாளத்தை மறைக்க கொடி மாற்றம், பதிவு தகவல் பொய்யாக்கம், கண்காணிப்பு அமைப்புகளை முடக்கம் போன்ற ஏமாற்று நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

லாயிட்ஸ் ஆஃப் சிங்கப்பூர் ஷிப்பிங் டெய்லி தரவின்படி, அருகிலுள்ள இந்தோனேசிய ரியாவ் தீவுகளிலும் 130 நிழல் கப்பல்கள் காணப்பட்டுள்ளன.

கப்பல் பார்வையாளர் ஒஸ்மான் கூறுகையில், “உக்ரைன் போரும் மத்திய கிழக்கு பதற்றங்களும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்தும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன” என்றார். நிபுணர்கள், தற்போதைய ஐ.நா. கடல் சட்டம் இத்தகைய நிழல் கடற்படைகளை எதிர்கொள்ள போதுமானதல்ல என சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் அந்தக் காலத்தில் டிரான்ஸ்பாண்டர்கள் இல்லாததால், இப்பிரச்சினை எதிர்காலத்தில் உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சட்ட நிபுணர் ராஜு விளக்கினார்.

சிங்கப்பூர் அரசு, ஐ.நா. தீர்மானங்களை முழுமையாக பின்பற்றி, தனது கடல் எல்லைகளில் கப்பல்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.