அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

கேரட்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை சாப்பிடுவது நமது கண்பார்வை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஆனால் அதையே அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது அது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

“carrotmaxxing” என்று அழைக்கப்படும் ஒரு சமூக ஊடக சவால் TikTok இல் பிரபலமாகி இருக்கிறது.இதில் பங்கேற்பாளர்கள் அதிக அளவு கேரட் சாப்பிடுவதைப் பதிவு செய்து அதை TikTok இல் பதிவேற்றுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு அதிகளவு கேரட்டை சாப்பிட்டால் சருமமானது ஆரஞ்சு நிறமாக மாறலாம்.பீட்டா கரோட்டின் தான் கேரட்டுக்கு ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது.நம் உடலில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருந்தால்,நமது சருமத்தின் நிறமும் மாறலாம்.

மேலும், அதிகமாக கேரட் சாப்பிடுவது அதிக கொழுப்பை ஏற்படுத்தும்.ஆனால் அனைவருக்கும் இந்த உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாது.அதிகமாக கேரட் சாப்பிடுவது ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஒருவர் அதிக அளவு கேரட்டுகளை சாப்பிட்டதால் அவருக்கு அதிக உப்பு மற்றும் இதயப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.இது குறித்து அவர் தனது X தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

இது போன்ற சம்பவங்கள் உண்மைதான் என்றாலும், நமது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, எல்லாவற்றையும் அளவாகச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.