சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!!
சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் போதையில் வாகனத்தை ஓட்டியவர் கைது!!
சிங்கப்பூர் ஃபாரர் பார்க் மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது மட்டுமில்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் மீண்டும் பின்புறமாக இயக்கிய 39 வயது நபர் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை ஜூன் 3 போலீசார் தெரிவித்தனர்.
ஜூன் 29ஆம் தேதி இரவு 11 மணி அளவில் ஒரு கார் விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர் காவல் படைக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தின் காணொளி இணையத்தில் வைரலாக பரவியது.
வாகனத்தை ஓட்டியவர் ரேஸ்கோர்ஸ் சாலையில் டெசென்சோன் சாலையை நோக்கி செல்லும் வழியில் உள்ள வாகன தடுப்பு கம்பியின் மீதும் தடுப்புச் சுவர் மீதும் மோதி உள்ளார்.
மேலும் வாகன ஓட்டி வாகனத்தை நிறுத்தாமல் மீண்டும் வாகனத்தை பின்னால் இயக்குவது போலும் இணையத்தில் வெளி வந்த காணொளியில் தெரியவந்தது.