உலக கோப்பை போட்டியில் வரலாறு படைத்த எகிப்து..!! வீழ்த்தியது யாரை..??
2026 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் 13 வது நிமிடத்தில் எகிப்து முதல் கோல் அடித்தது. அதன் பின்னர் 55 வது நிமிடத்தில் ஏற்பட்ட ஒரு சுய கோல் காரணமாக ஆஸ்திரேலியா 1-1 எனது சமநிலை பெற்றது.
கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் சமநிலையில் நீடித்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
இதில் எகிப்து அணி 4-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. எகிப்து கேப்டன் முகமது சாலா அடித்த பானென்கா (Panenka) கோல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த வரலாறு படைத்த வெற்றியின் மூலமாக எகிப்தானின் தனது உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன் முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்று அடுத்ததாக அர்ஜென்டினா அணியை எதிர்கொள்ள உள்ளது.
முகமது சாலாவின் 2024-25 வரலாற்று சீசன் என கூறப்படுகிறது. ஒரே சீசனில் கோல்டன் போட், சிறந்த பிளேமேக்கர் மற்றும் பிளேயர் ஆப் தி சீசன் ஆகிய மூன்று முக்கிய விருதுகளையும் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் பிரீமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டின் வரலாற்றிலும் அதிக கோல் அடித்த ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கோல்டன் பூட் விருதை நான்கு முறை வென்று அசத்தியுள்ளார்.