சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்து..!! 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்து..!! 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

சீனா: ஹுனான் மாநிலத்தில் உள்ள லியுயாங் ஹூவாஷெங் பட்டாசு ஆலையில் திடீரென பெரும் விபத்து ஏற்பட்டது.

பெரும்பாலான கட்டிடங்களின் கூரைகள் சிதறியது. இதில் பணியாற்றிய ஊழியர்களில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் 61 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தில் கடும் புகை வானில் உயர்வது சமூக ஊடகங்களில் காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்ட வைரலாகி வருகிறது.

இந்த வெடி விபத்து நடந்த இடத்திற்கு தேடல் மீட்பு பணிகளுக்காக 480 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் நிறுவனத்தை நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து விடை விபத்து ஏற்பட்டதன் காரணத்தை விசாரித்து வருகிறது.

அதிபர் சி சின்பிங் இந்த பட்டாசு வெடி விபத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சீனாவில் விற்கப்படும் 60% பட்டாசுகள் சீனாவின் மிகப்பெரிய பட்டாசு உற்பத்தி இடமான லியுயாங் நகரத்திலிருந்து தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK