இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!!

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!!

சீனாவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் இறந்த தனது மகனின் மனைவியை திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள்,வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துள்ளார்.

அந்த முதியவரின் மனைவி 2022 இல் காலமானார்.

பின்னர் கடந்த ஆண்டு, அவரது மகன் 53 வயது காதலி வாங்கை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அவர்கள் மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

வாங் முதியவரையும் அவரது மகனையும் நன்றாக கவனித்துக் கொண்டார்.

அந்த முதியவரின் மகன் பிப்ரவரி மாதம் கல்லீரல் நோயால் இறந்தார்.

பின்னர், கடந்த மாதம் 12 ஆம் தேதி முதியவரும் வாங்கும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் அவரது மகள், வாங் தனது தந்தையின் சொத்துக்காக அவரை மணந்ததாக குற்றம் சாட்டினார்.

எனவே, அவரது தாயின் பெயரிலிருந்து அவரது தந்தையின் பெயருக்கு சொத்து மாற்றப்படுவதை எதிர்த்தார்.

இதற்கு வாங் முதியவரின் சொத்தை என்றுமே தான் பெரிதாக நினைத்ததில்லை என்று கூறினார்.

வயதான காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அன்பினாலும் அக்கறையினாலும் தான் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார்.