வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை மறுநாள் (மே 3) வாக்களிப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் வாக்குச் சாவடியில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்..??

✅️ வாக்குச்சீட்டில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும்.


✅️ வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும்.

✅️ வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மட்டுமே செல்ல வேண்டும்.

✅️ வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

✅️ வாக்குச்சீட்டில் உங்கள் விருப்பத்தை ‘X’ என்ற குறியீட்டால் குறிக்க வேண்டும்.

✅️ வாக்குச்சீட்டை மடித்து பெட்டியில் போட வேண்டும்.


✅️ வாக்காளர்கள் அமைதி காத்து வாக்களித்துச் செல்ல வேண்டும்.

✅️ வாக்களிப்பு செயல்முறை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்,ஒரு தேர்தல் அதிகாரியின் உதவியை நாடலாம்.

வாக்காளர்கள் என்ன செய்யக்கூடாது?

🔴 வாக்குச்சீட்டை சேதப்படுத்தவோ அல்லது அதில் எதையும் எழுதவோ கூடாது.

🔴 வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த வாக்குச் சாவடிக்கும் செல்லக் கூடாது.

🔴 செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது.

🔴

அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னத்தைக் காட்டும் எந்த ஆவணங்களையும் வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்லக்கூடாது.

🔴

வாக்குச் சாவடிக்கு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னம் பொருந்திய ஆடைகளை அணியக் கூடாது.

🔴

வாக்குச் சீட்டில் எதையும் கையொப்பமிடவோ அல்லது எழுதவோ கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் வாக்கு செல்லாததாகிவிடும்.

🔴

வாக்குச் சீட்டை வாக்குச் சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. அது ஒரு குற்றம்.

🔴

வேறு எதையும் வாக்குப் பெட்டியில் போடக் கூடாது.

🔴

வாக்குச்சாவடிக்குள் கேமரா,வீடியோ பதிவு சாதனங்களை எடுத்துச் செல்லக்கூடாது.

🔴

வாக்குச் சாவடியில் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan