ஜுராங் பகுதியில் PMA - பேருந்து மோதல்..!! 52 வயது நபர் படுகாயம்..!!
சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் டவர் ட்ரான்சிட் (Tower Transit) பேருந்துடன் தனிநபர் நடமாடும் உதவி சாதனம் (PMA) மோதிய விபத்தில், 52 வயது நபர் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது ஜூலை 19 அன்று காலை 9:45 மணியளவில் கார்ப்பரேஷன் டிரைவ் (Corporation Drive) பகுதியில் அமைந்துள்ளது.
சேவை எண் 49 பேருந்து, பேருந்து நிறுத்தத்திற்குள் நுழைந்தபோது, அந்த நபர் நடைபாதையில் இருந்து திடீரென சாலையை நோக்கி வந்து பேருந்தின் பக்கவாட்டில் மோதினார்.
மோதிய வேகத்தில் அவர் கீழே விழுந்ததை அடுத்து, பேருந்து ஓட்டுநரும் அங்கிருந்த ஒரு வழிப்போக்கரும் உடனடியாக அவருக்கு உதவினர்.
விபத்தில் சிக்கிய நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனையில் (NUH) சேர்க்கப்பட்டுள்ளார்.
மோதிய தாக்கத்தில் நடமாடும் சாதனத்தின் கைப்பிடி உடைந்ததுடன், அதன் ஒரு பகுதி பேருந்து அடியில் சிக்கியது. பேருந்தில் வந்த பயணிகளுக்கும், ஓட்டுநருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.