சிங்கப்பூரில் இந்திய உணவுக் கடையில் தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் இந்திய உணவுக் கடையில் தீ விபத்து..!! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரின் அப்பர் புக்குட் தீமா ரோட்டில் அமைந்துள்ள அல் ஹஸிமா என்ற இந்திய உணவுக் கடையில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தானது நேற்று (ஜூலை 20) நள்ளிரவு 12 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

 

உணவுக் கடை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

 

 

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே கடையில் உள்ளே இருந்த 20 பேரும் வெளியேறிவிட்டனர்.

SCDF வீரர்கள் தண்ணீரை பீச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கடைசியில் முழுமையாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கடையில் இருந்த மின்சார விநியோக சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணையை காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.