பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!!

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.08.25) மாலை பொங்கோலில் உள்ள ஒரு நிர்வாகக் குடியிருப்புப் பிரிவின் 16 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இது அதே இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீண்டும் நடந்த சம்பவமாகும்.

இரட்டை மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை, கீழ் மாடியில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர் தண்ணீர் குழாயைப் பயன்படுத்தி அணைக்க முயன்றார். இந்த முயற்சி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் நடந்ததென சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்த நான்கு பேரைக் காப்பாற்றினர்.

அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 100 குடியிருப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் 2020-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, இதே கட்டடத்தில் PMD (Personal Mobility Device) சார்ஜ் செய்யும்போது தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.அப்போது ஆறு பேர் சிக்கிக்கொண்ட நிலையில்,ஐந்து பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து குடியிருப்பாளர்கள் கூறியதாவது,அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதைப் பற்றி ஒரு குடியிருப்பாளர் கவலை தெரிவித்தார். முந்தைய சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொரு அறையிலும் பெரிய தீயணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று அவர் கூறினார்.

தற்போது இணையத்தில் மீட்புக்கு உதவிய அண்டை வீட்டுக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan