சிங்கப்பூரில் இலவச விநியோகம்..!!!என்ன? தெரிந்து கொள்ள அந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் இலவச விநியோகம்..!!! என்ன? தெரிந்து கொள்ள அந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூர்: தேசிய நூலக வாரியம் தனது 30- ஆம் ஆண்டை நேற்று (13/09/2025) நிறைவு செய்துள்ளது. நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நூலக வாரியம் ஆனது நூல்களை இலவசமாக வழங்குவதற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

நேற்றும்(13/09/2025) இன்றும்(14/09/2025) 100 விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் சுமார் 60,000 நூல்களை தேசிய நூலக வாரியம் ஆனது இலவசமாக வழங்க உள்ளது.

நூலகத்திற்கு இலவச நூல்களை பெற வரும் நூல் பிரியர்கள் ஒவ்வொருவரும் 10 நிமிடங்களுக்குள் 10 நூல்கள் வரை இலவசமாக எடுத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு நேற்று (13/9/2025) மிகப்பெரிய திரளாக நூலகத்தில் மக்கள் குவிந்தனர்.

இலவசமாக வழங்கக்கூடிய நூல்களை பெறுவதற்கு நூல் வாசிப்பு பிரியர்கள் மூன்று மணி நேரமாக தேசிய நூலகத்தில் காத்திருந்தனர்.

நூல்களை எடுத்துச் செல்ல வந்த நூல் வாசிப்பாளர்கள் இலவச புத்தகங்களை எடுத்து செல்வதற்கு சிலர் தள்ளுவண்டிகள், பைகள் ஆகியவற்றைத் தவிர பயணப் பெட்டிகளையும் கொண்டு வந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

நூல்களை பெற்ற ஒருவர் காலை 10 மணிக்கு நூலகத்திற்கு சென்று மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்த பின்னர் இலவச நூல்களை பெற்று வந்ததாக தெரிவித்தார்.

தேசிய நூலக வாரியம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் இந்த இலவச நூல் விநியோகத்தை நடத்தி வருகிறது. இந்த முறை நூலக வாரியம் ஆனது மிகப்பெரிய அளவில் நடத்தியுள்ளது.

தேசிய நூலக வளாகத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நூல்களை எடுத்துச் செல்லலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலவச நூல்களானது நான்கு அதிகாரத்துவ மொழிகளில் உள்ள புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan