சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!
சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது.
இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும் என்று கூறினார்.
தேசிய பூங்கா கழகம் பொது இடங்களில் வைக்கும் பாதுகாப்பு கேமராக்களை சேதப்படுத்தி பொறிகளில் சிக்கும் பறவைகளை விடுவித்ததற்காக இதற்கு முன் பிடிப்பட்டோர் எச்சரிக்கையுடன் விடப்பட்டனர்.
ஆனால் அதே போன்ற நடவடிக்கை இனியும் தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றம் சுமத்தி சிறை தண்டனை விதிக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக திரு சண்முகம் கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும் புறாக்கள் தொடர்பில் 900 புகார்கள் அதிகாரிகள் பெற்றன.
இயற்கையுடன் நாம் ஒன்றி வாழ வேண்டும் ஆனால் புறாக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகும் போது அதை கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று கூறினார் திரு சண்முகம்.
அளவுக்கு அதிகமான புறாக்கள் சுகாதாரத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடும் என்று சுட்டி அவர் பொது இடங்கள் உணவகங்காடிகளில் அவை எச்சங்களை விட்டு செல்கின்றன எனவே அவற்றுக்கு உணவளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.