சிங்கப்பூரில் அறுவடை நிலவு காட்சி..!!! எப்போது தோன்றும்?
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அறுவடை நிலவானது இந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதம் (7 ஆம் தேதி) இலையுதிர் கால விழாவின்போது (அக்டோபர் 6) அடுத்த நாள் மாலை 7 மணி அளவில் உதிக்கும் என சிங்கப்பூர் அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அன்று இரவு 8 மணிக்கு பிறகு நிலவானது பார்ப்பதற்கு ஏற்ற உயரத்தில் தெரியும். அக்டோபரில் வானம் இரண்டு வானியல் அதிசயங்களால் நிறைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. 💠 அறுவடை நிலவு சூப்பர் மூன் 💠 ட்ராகோனிட் விண்கல் மழை
உள்ளூர் வானியல் ஆர்வலர்களுக்கு அதிர்ஷ்டமான ஒன்றாக இது தோன்றும்.
அறுவடை நிலவானது இல எதிர்கால சம இரவு பகலுக்கு மிக அருகில் வருவதாகும். இந்த ஆண்டு (2025) செப்டம்பர் 25ல் இருந்து இலையுதிர் காலத்தின் தொடக்கமாகும்.
ட்ராக்கோனிக்ஸ் விண்கல மழை அக்டோபர் 7 முதல் 10 வரை நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் வானத்தில் பரவி காணப்படும். விண்கல் மலையின் கதிரியக்க புள்ளியானது அக்டோபர் 8-ஆம் தேதி இரவு 8 மணி முதல் பார்க்க இயலும்.
நவீன விண்கல் பொழிவைப் பார்ப்பதற்கு சிங்கப்பூர் அறிவியல் மையம் ஆய்வகம் நிகழ்வுகளை நடத்தாது. ஆனால் தேசிய பூங்கா வாரியத்தின் “லேக்ஸ் பை தி லேக்” விழாவினை ஒரு பகுதியாக அக்டோபர் 3-ஆம் தேதி திறந்தவெளியில் நடத்தும்.
பொதுமக்கள் அனைவரும் “பிளைட் டு தி மூன்” என்ற நிகழ்ச்சியை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு ஒவ்வொரு நிகழ்ச்சியும் கடைசி நிகழ்ச்சி இரவு 9:30 மணிக்கு நடைபெறும். நிகழ்வு நடைபெறும் அன்று மாலை 6:30 மணி முதல் இலவச டிக்கெட்டுகள் தளத்தில் வழங்கப்படும்.