“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக்

"பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்"-டாக்டர் டான் செங் பொக்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சனிக்கிழமை( மே 10) அறிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் கட்சியிலேயே நீடிப்பார் என்று கூறினார்.

இன்று வெஸ்ட் கோஸ்ட் புளோக் 726இல் உள்ள சந்தையில் மக்களைச் சந்தித்து, கட்சிக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சமீபத்திய பொதுத் தேர்தலில், டாக்டர் டான் தலைமையிலான அணி வெஸ்ட் கோஸ்ட் -ஜூரோங் வேஸ்ட் உள்ளிட்ட தொகுதியில் போட்டியிட்டு மக்கள் செயல் கட்சியிடம் தோல்வியடைந்தது.

மே மூன்றாம் தேதி நடந்த தேர்தலில் தேசிய வளர்ச்சி அமைச்சர் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணி 60.01% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி தோல்வியடைந்தாலும், கட்சி நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து பணியாற்றும் என்று டாக்டர்.டான் கூறினார்.

அடுத்த தேர்தலில் இளைய அணியுடன் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற கட்சி கடுமையாக உழைக்கும் என்று அவர் கூறினார்.