தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்...!!!

சீனாவில் தொழிலதிபர் ஒருவர் தங்க முதலீட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் (S$1.8 மில்லியன்) லாபம் ஈட்டினார்.
இதனால் லியு மிங்ஜுன் எனும் தொழிலதிபர் அந்தத் தொகை முழுவதையும் தனது 2,000 ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இசைக்கலைஞரான இவர், 2021 ஆம் ஆண்டு சான்சி மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் திறந்தார்.
காலப்போக்கில், அவர் 33 கிளைகளைத் திறந்தார்.அண்டை மாகாணங்களில் கூடுதல் கிளைகளையும் திறந்தார்.
இதனால் தற்போது அவரிடம் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
2 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்தவர்களுக்கு 1,400 டாலரும் (சுமார் $1,790)ஒரு வருடத்திற்கும் குறைவாக வேலை செய்தவர்களுக்கு 270 டாலரும் (சுமார் $350) கூடுதலாக 2 நாட்கள் விடுமுறையும் அளித்தார்.
ஒரு வருடத்திற்கும் குறைவாக வேலை செய்தவர்களுக்கு 130 டாலரும் (சுமார் $170) 2 நாட்கள் விடுமுறையும் அளித்தார்.
தனது செல்வத்தை தனது ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள நீண்ட காலமாக திட்டமிட்டு வருவதாக திரு.லியு கூறினார்.
எதிர்வரும் காலத்திலும் இந்த வழக்கத்தை தான் பின்பற்ற போவதாக தெரிவித்தார்.
அவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

