சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகள்!!

சிங்கப்பூர் செல்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் சிங்கப்பூர் டெஸ்ட் அடித்து சென்றால் சிறப்பாக இருக்கும் என்பது . ஆனால் இப்போது இந்தியாவில் சிங்கப்பூர் டெஸ்ட் சென்டர் எதுவும் ஓபனில் இல்லை. அதனால் பல பேர் டெஸ்ட் அடிப்பதற்கு காத்திருப்பதும் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவிப்பதும் பலரும் அறிந்த விஷயமே . ஆனால் சிங்கப்பூருக்கு சரியான முறையில் அங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்.இது இன்னும் பல பேருக்கு தெரியாது. அது எப்படி என்று இந்த பதிவில் காண்போம். நீங்கள் சிங்கப்பூருக்கு முதலில் சரியான பாஸ்ஸில் சென்றால் மட்டுமே அங்கு சென்று டெஸ்ட் அடிக்க முடியும்.
சிங்கப்பூரில் ஒரு சில பாஸ்களில் சென்றால் டெஸ்ட் அடிக்க அனுமதி கிடையாது . அது என்னென்ன பாஸ் என்று முதலில் பார்ப்போம்.
1. Tep
2. NTS
3. Service sector
இந்த பாஸ்களில் நீங்கள் சிங்கப்பூர் சென்றால் உங்களால் டெஸ்ட் அடிக்க முடியாது . எந்த பாஸில் சென்றால் டெஸ்ட் அடிக்கலாம் என்று பார்ப்போம்.
1. Shipyard
2. pcm
3. S Pass(consultation sector)
4. E Pass(consultation sector)
இந்த பாஸ்களில் சென்றால் உங்களால் அங்கு டெஸ்ட் அடிக்க முடியும். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. அது என்ன என்றால் S Pass,E Pass கன்ஸ்டிரக்சன் செக்டார் தவிர PCM,Shipyard பெர்மிட்டுகளில் நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் அதற்கு கம்பெனியின் அனுமதி வேண்டும். கம்பெனி அனுமதி கடிதம் கொடுத்தால் மட்டுமே உங்களால் டெஸ்ட் அடிக்க முடியும்.
இதற்கு கம்பெனி அனுமதி கடிதம் கொடுப்பது கடினம். Shipyard பெர்மிட்டில் அனுமதி கடிதம் கிடைக்காது.
நீங்கள் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை PCM பெர்மிட்டில் செல்லவும்.
PCM பெர்மிட்டில் சென்று அதுவும் கன்ஸ்ட்ரக்ஷன் செக்டராக இருந்தால் மிகவும் எளிதாகவே கம்பெனியே உங்களுக்கு லெட்டர் கொடுத்து டெஸ்ட் அடிக்க வைப்பார்கள். ஆனால் இதற்கு முன்னதாகவே ஏஜென்ட்கள் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். கன்ஸ்ட்ரக்சன் செக்டரில் PCM இல் எடுக்கிறார்கள் என்றால் நிச்சயமாக உங்களை டெஸ்ட் அடிக்க வைப்பார்கள். நீங்கள் தைரியமாக செல்லலாம் .ஆனால் அதற்கு பணம் கட்டி விட்டு செல்லாதீர்கள்.ஒரு சில ஏஜென்ட்கள் ஒரு வருடம் கழித்து உங்களை டெஸ்ட் அடிக்க வைப்பார்கள் என்று கூறி அதிகமான தொகையை வாங்குவார்கள் .நீங்கள் அது போன்று கட்ட வேண்டாம் . S Pass,E Pass இல் கன்ஸ்ட்ரக்ஷன் செக்டரில் நீங்கள் சென்றால் கம்பெனி அனுமதி கடிதம் இல்லாமலே உங்களால் டெஸ்ட் எடுக்க முடியும் . சிங்கப்பூரில் நீங்கள் டெஸ்ட் அடிக்க இதுவே சரியான வழி. இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள நமது SGTAMILAN இணையப்பக்கத்தில் இணைந்திருங்கள்
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

