சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!!

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா...!!!

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.

அது அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்க விரும்புவதாக அதன் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 32 சதவீத வரியை விதித்துள்ளது.ஆனால் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் போல ஜூலை மாதம் வரை வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் செயல்முறை படிப்படியாக இருக்கும் என்று இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் பஹ்லில் லஹாட்டாலியா தெரிவித்தார்.

இந்தோனேசியா ஆரம்பத்தில் அதன் மொத்த எரிபொருள் இறக்குமதியில் 60 சதவீதம் வரை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

மேலும் கடுமையான வரிகளைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபர்
டோனால்ட் டிரம்புடன் வர்த்தக உறவுகளை சீராக்கிக் கொள்ள இந்தோனேசியா விரும்புகிறது.

இந்தோனேசிய அரசாங்கம் தனது அமெரிக்க எரிசக்தி இறக்குமதியை சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்க விரும்புவதாகக் கூறியுள்ளது.

அதன்படி இந்தோனேசியா பத்து மடங்கு கூடுதல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிடமிருந்து வாங்க முனைகிறது.

இதில் அமெரிக்க எரிபொருள், கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) ஆகியவை அடங்கும்.