பின் காக்கின்றோம் மோடி என்ன செய்யும்? இன்காக்னிடோ மோடில் இணையத்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் பிரவுசர் (Browser) வரலாற்றில் சேமிக்கப்படாது.
தேடல் வரலாறு ( Search History), கணக்கு விவரங்கள் (Account Details) மற்றும் குக்கீஸ் (Cookies) போன்றவை அந்த விண்டோவை மூடியவுடன் தானாகவே நீக்கப்படும். இதனால் உங்களுக்குப் பிறகு அதே சாதனத்தைப் பயன்படுத்துவர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்பதை எளிதில் அறிய முடியாது.
இன்காக்னிடோ மோட் என்ன செய்யாது? இன்காக்னிடோ மோட் ஆன் செய்தவுடன் இணைய உலகில் நாம் காணாமல் போய்விடுவோம். நாம் என்ன செய்தாலும் என்ன பார்த்தாலும் யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் அது தவறானது !
இன்காக்னிடோ மோட்டில் நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் உங்கள் இணைய சேவை வழங்குநர் (Internet Service Provider), அலுவலகம் அல்லது கல்லூரி நெட்வொர்க் நிர்வாகிகள் ஆகியோரால் உங்கள் செயல்பாடுகளை இன்னும் பார்க்க முடியும்.
இன்காக்னிடோ மோட் எப்போது பயனுள்ளதாக இருக்கும்? பொது கணினிகளில் ஈமெயில் (E-Mail) பார்க்கும் போது குடும்பத்தினர் பயன்படுத்தும் கணினியில் தனிப்பட்ட தேடல்கள் செய்யும்போது அல்லது ஆன்லைன் ஷாப்பிங்கில் விலை ஒப்பிடும்போது இன்காக்னிடோ மோட் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கூடுதல் தனியுரிமை (Privacy) வேண்டுமா? இன்காக்னிடோ மோட் மட்டும் போதாது VPN என்ற தொழில் முறை மென்பொருட்களைப் பயன்படுத்துவது, பிரவுசர் குக்கீஸை அடிக்கடி நீக்குவது, கணக்குகளில் தன்னிச்சையாக உள்நுழையும் வசதியை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் உங்கள் இணைய தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும்.
மொத்தத்தில் இன்காக்னிடோ மோட் என்பது முழு ரகசியம் அல்ல ; அது தனியுரிமை (LocalPrivacy) வழங்கும் ஒரு வசதி மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.