ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்...!!!

ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில்
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் நிலவி வந்த அசாதாரணமான சூழ்நிலை காரணமாக ஐபிஎல் 2025 போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கிடையில், ஒரு வாரத்திற்குப் பிறகு எந்தவித பதற்றமும் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்ட தென் மாநிலங்களான சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று ஒரு கூட்டத்தை நடத்த உள்ளன. இதை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி, இன்று நடைபெறும் கூட்டத்தில் ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் விளையாடும் பல வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதால், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான அட்டவணை தயாராக இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அநேகமாக அடுத்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தச் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.