ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??
ஜோகூர் பாரு சோதனை சாவடி கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது என மலேசியா எல்லை கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் குடிநுழைவுச் சோதனைகள் தாமதமாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. பணி நடைபெறும் நேரத்தில் பயணிகள், வாகனச் சோதனைகள் பாதிக்கப்படலாம் என மலேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு நேற்று (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக கடற்பாளத்தை கடக்கும் பயணிகளை பிஎஸ்ஐ கையாளும் என்பது தெரியவந்துள்ளது.
எல்லை சோதனை குடிநுழைவு அனுமதியை விரைவுபடுத்த பயணிகள் தங்கள் பயண ஆவணங்கள் முறையாக இருப்பதே உறுதி செய்து கொள்ளல் அவசியமாகும்.
Touch N Go என்ற அட்டைகளில் போதிய பணம் இருப்பதையும் மலேசிய மின்னிலக்க வருகை அட்டை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஜோகூர் பாரு சோதனைச் சாவடி கட்டடத்தில் (நாளை)பிப்ரவரி 27 முதல் மார்ச் 14 வரை அதிகாலை 12:30 மணியிலிருந்து 3:30 மணி வரை பராமரிப்பு வேலையானது நடைபெறும்.
பிப்ரவரி 25ஆம் தேதி அதிகாலையின் போது பிஎஸ்ஐ சோதனை சாவடியில் உள்ள அனைத்து தானியக்க கதவுகளும் செயல் இழந்த காரணத்திற்காக தற்போது தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது.