வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!!
வெளிநாடுகளுக்கு வேலை செய்ய ஆட்களை அனுப்புவது மற்றும் ஏஜென்சி செயல்படுவது எவ்வாறு என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளில் இயங்கு தரும் நிறுவனங்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை எனில் அந்த நாடுகளில் இருக்கும் அரசாங்கம் மூலமாக இயங்கி வரும் லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு நிறுவனமானது வேலைவாய்ப்புகளின் தகவல்கள் பற்றி அனுப்பும்.
பிறகு அந்த நாட்டின் லைசன்ஸ்டு ஏஜென்சி ஆனது தமிழ்நாட்டில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்ற லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு வேலை வாய்ப்புகளின் தகவல்கள் பற்றி தெரிவிக்கும்.
வேலைவாய்ப்புகளின் தகவலானது அனுப்புவதற்கு முன்பு ஏஜென்சியின் விவரங்கள் முதலில் சரிபார்க்கப்படும்.
தாவது இந்த ஏஜென்சியானது சரிவர இயங்குகிறதா? எத்தனை நபர்களை இதுவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி பணியில் அமர்த்தப்பட்டு நிரந்தரமாக எந்த பிரச்சினைகளும் வராமல் உள்ளது என அரசாங்கம் ஆராயும்.
மேலும், லைசென்ஸ்டு ஏஜென்சிகளின் ஏதேனும் கம்ப்ளைன்ட் பதிவாகி இருக்கிறதா? எனவும் அரசாங்கம் ஆராய்ந்து பார்க்கும்.
இதுபோன்ற லைசென்ஸ்டு ஏஜென்சி மூலமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அனைத்து தகவல்களும் அரசாங்கப் பதிவில் பதிவேற்றப்பட்டிருக்கும்.
அதாவது பணிபுரிபவர்களின் சம்பளம் விவரம் நிறுவனத்தின் பெயர் போன்ற அனைத்து விவரங்களும், அரசாங்கத்திற்கு லைசன்ஸ்டு ஏஜென்சிகள் கொடுக்க வேண்டும்.
டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு செல்பவர்கள் விவரங்கள் மேற்கண்டவாறு தகவல்கள் அரசாங்கத்திற்கு தெரிய வாய்ப்பு இல்லை.
சுற்றுலா பயணிகளாக செல்கின்ற நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் சம்பளம் போன்ற தகவல்கள் எதுவும் அரசிற்கு தெரியாது. இது போன்ற நிலையில் டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு செல்பவர்கள் நிலை பற்றி சற்று கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் அங்கு வேலை செய்யும் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டாலோ அல்லது வேறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அரசாங்கத்திற்கு எந்த தகவலும் தெரியாது. மேலும், நடவடிக்கை எதுவும் எடுக்கவும் இயலாது.
மேலும் டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு சென்றுள்ள விவரங்கள் அரசாங்கத்திற்கு தெரிய வரும் போது தண்டனைக்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளது.
லைசன்ஸ்டு ஏஜென்சி மூலமாக without டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு செல்கின்ற நபர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் உடனே கம்பளைண்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், பிரச்சனைகளை அரசாங்கம் கண்டனர்ந்து உடனே இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
லைசன்ஸ்டு ஏஜென்சியிலும் நிறைய வகைகள் உள்ளன. அவையாவன: 1000 plus, 100plus மற்றும் Small Scale Industry மூலம் உள்ள லைசென்ஸ்கள் உள்ளன. இதில் சில ஏஜென்சிகள் ரினிவல் செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆகையால், சரியாக check செய்து அந்த ஏஜென்சிகளை தொடர்பு கொள்ளலாம்.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்சி மூலமாக செல்வதே நல்லது. வடநாட்டில் இருக்கும் ஏஜென்சி மூலமாகவோ அல்லது பிற நாட்டிலிருந்து இருக்கும் ஏஜென்சிகளின் மூலமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முயன்றால் ஏமாற அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால் வடநாட்டில் லைசென்ஸ்டு ஏஜென்சிகள் டூப்ளிகேட் எடுத்து வைத்துக்கொண்டு ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆகையால் தமிழ்நாட்டிற்குள் இருக்கும் ஏஜென்சி மூலமாக வேலைக்கு செல்ல முயலுங்கள்.
உங்களுக்கு Licenced ஏஜென்சிகளை தெரியவில்லை எனில் பின்வரும் சேனல்களை follow செய்து பயன்பெறுங்கள்.
மேலும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் விவரங்களை நமது இணையதளமான www.sgtamilan.com சென்று தெரிந்து கொண்டு பயனடையுங்கள்.