நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை...!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆனது நாய் பயிற்சியில் உயர் தரங்களை நிலைநாட்டவும், விலங்குகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு நவீன வழிகாட்டுதல்களை உருவாக்கவும், ஒரு சிறப்பு “நாய் பயிற்சி தரநிலைகள் பணிக்குழு” உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள், நாய் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நாய்களின் உடல் மற்றும் உளநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அறிவியல் அடிப்படையிலானவற்றாக இருக்கின்றன. குறிப்பாக, மின்னணு அதிர்ச்சி காலர், ஸ்பைக் காலர் போன்ற தண்டனை கருவிகளை தவிர்க்கவேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
விலங்கு சேவை பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,
♦️ இத்தகைய தண்டனை கருவிகள் நாய்களின் மனநலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை,
♦️ அதனால் அவர்கள் ஆக்ரோஷமாக மாறும் வாய்ப்பு அதிகம்,
♦️ இதன் விளைவாக சுற்றியுள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, வெகுமதி அடிப்படையிலான பயிற்சிமுறைகள் (positive reinforcement methods) அதிக பயனுள்ளதாகவும், நாய் மற்றும் உரிமையாளர்களிடையே நல்ல உறவினை உருவாக்கக் கூடியதாகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இது உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாய்களின் நடத்தை, அவர்களுடன் எதிர்பார்க்கும் பயிற்சி முறைகள், மற்றும் விலங்கு மறுவாழ்வு மையங்களில் நடக்கும் பணிகள் குறித்தும் புரிதலை வழங்கும்.
இந்த முயற்சியில் தேசிய பூங்கா வாரியம், SPCA, கால்நடை மருத்தவர்கள், பயிற்சியாளர்கள், நல அமைப்புகள் என பல தரப்பினர் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்