சிங்கப்பூரில் தேசிய பேரணி நிகழ்ச்சி – பிரதமர் உரை..!!!

சிங்கப்பூரில் தேசிய பேரணி நிகழ்ச்சி - பிரதமர் உரை..!!!

சிங்கப்பூர்: வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17ஆம் தேதி) பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைமையகத்தில் தேசிய பேரணி உரை நிகழும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அன்று மாலை 6:45 மணிக்கு மலாய் மற்றும் சீன மொழிகளில் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8:00 மணி முதல் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார் என்றும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்களில் ஒளிபரப்பப்படும்.

இந்த தேசிய தினப் பேரணி இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் உரையாக கருதப்படுகிறது. மேலும், அப்போது பிரதமர் தேசத்தைப் பற்றி உரையாற்றி முக்கிய கொள்கை அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரு வோங்கின் உரை சேனல் 5 மற்றும் CNA 93 ஆங்கிலத்திலும் சேனல் எயிட், சேனல் யூ மற்றும் CAPITAL 958 மாண்டரின் மொழியிலும் சூர்யா மற்றும் WARNA 942 வில் மலாய் மொழியிலும் வசந்தம் மற்றும் OLI 968ல் தமிழில் ஒளிபரப்பப்படும்.

நேரடி ஒளிபரப்பை திரு வோங்கின் whatsapp மற்றும் telegram சேனல்களிலும் நேரடி புதுப்பிப்புகள் வழங்கப்படும்.

நேரடி ஒளிபரப்பை தவறவிட்டவர்கள் ஆகஸ்ட் 18 முதல் PMO வின் youtube சேனல் அல்லது PMO வின் இணையதளத்திலும் பார்க்கலாம்.

இந்த தேசிய பேரணியானது, பிரதமர் திரு வோங்கின் இரண்டாவது தேசிய பேரணியாகும். மேலும் இந்த ஆண்டு(2025) பொதுத்தேர்வில் மக்கள் செயல் கட்சியை(PAP) வெற்றிக்கு அழைத்துச் செல்வது முதல் முறையாகும்.

பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan