அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

சிங்கப்பூரில் ரயில் பாதையின் புதிய நிலையமான ஹியூம் ரயில் நிலையம் திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே திறக்கப்படும்.

வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார்.

Downtown ரயில் பாதையின் ஹியூம் நிலையம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று இதற்குமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹியூம் நிலையம் திறந்த உடன் அங்கு குடியிருக்கும் மக்கள் சிங்கப்பூரின் மத்திய பகுதிக்கு செல்வது மிகவும் எளிமையாகிவிடும் என்று அமைச்சர் சீ அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் மத்திய Exhausted செல்வதற்கு பயண நேரம் முன்பெல்லாம் 45 நிமிடங்களாகிவிடும்.

ஆனால் இந்த நிலையம் திறந்த உடன் அங்கு செல்ல பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும் என்று கூறப்படுகிறது.

பதிய ஹியூம் நிலையம் ஹில் வியூ நிலையம் மற்றும் பியூட்டி வேர்ல்ட் நிலையம் ஆகிய இரண்டு நிலையங்களுக்கும் மத்தியில் அமைந்திருக்கும்.

ஹியூம் ரயில் நிலையம் முன்னாள் Ford factory, Rail corridor ஆகிய இடங்களுக்கு எளிமையாக சென்றடைய வழிவகுக்கும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan