இனி வீடுகளுக்கு அருகிலே வேலை..!!புதிய தளத்தை அறிமுகப்படுத்திய வடமேற்கு கவுன்சில்..!!

இனி வீடுகளுக்கு அருகிலே வேலை..!!புதிய தளத்தை அறிமுகப்படுத்திய வடமேற்கு கவுன்சில்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வடமேற்கு சமூக மேம்பாட்டு கவுன்சில், குடியிருப்பாளர்களுக்கு தங்களது வீட்டு அருகிலேயே வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கு உதவ, ‘Jobs Anywhere@North West’ எனும் புதிய வேலை தேடல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளம் NTUC வேலைவாய்ப்பு மையம் (e2i), வாழ்நாள் கற்றல் நிறுவனம் மற்றும் FindSGJobs ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. இதில் சுமார் 2,000 வேலைகள் வடமேற்கு மாவட்டத்தை சார்ந்தவையாகும்.

வேலை தேடுபவர்கள் தங்களது வீட்டிலிருந்து 1–5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலை வாய்ப்புகளை விரைவாக தேடி அறிய முடியும். மேலும், நெகிழ்வான வேலை நேரங்களை உள்ளடக்கியதால், குடும்ப பொறுப்புகளுடன் சமநிலையாக வேலை செய்வதற்கான வசதியும் உள்ளது.

இந்த தளம் இளம் வேலை தேடுபவர்களுக்கும், சமீபத்திய பட்டதாரிகளுக்கும் தொழில் வழிகாட்டல்களை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் விண்ணப்பங்களை தயார் செய்யவும், நேரடி தொழில் ஆலோசகர்களுடன் சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.

தற்போது இந்த தளத்தின் பீட்டா பதிப்பு பொதுமக்கள் மற்றும் முதலாளிகளுக்குத் திறந்துள்ளது.எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தப்படும் என்று சமூக மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan