சிங்கப்பூரில் தள்ளுபடி விலையில் தரமான உணவு…!!!தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

சிங்கப்பூரில் தள்ளுபடி விலையில் தரமான உணவு...!!!தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமடைந்துள்ள ஒரு புதிய நுகர்வு முறை “எஞ்சிய குருட்டுப் பெட்டிகள்” (Leftover Blind Boxes). இது உணவுக் கழிவுகளை குறைத்து, மக்களுக்கு உயர்தர உணவுகளை மலிவாக பெற வழிவகுக்கும் ஒரு வணிக முறையாகும்.

இந்த திட்டத்தின் கீழ், ஹோட்டல்களில் சேவை முடிவதற்குமுன் மீதமுள்ள பஃபே உணவுகள் குறைந்த விலையில் பேக்கேஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் மொபைல் பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்தி இந்த உணவுகளுக்கு முன்பதிவு செய்யலாம். “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் இந்த பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன.உணவுப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பது முற்றிலும் அதிர்ச்சி அனுபவமாக இருக்கும்.உண்மையில் இது ஒரு உணவுப் பிளைண்ட் பாக்ஸ் என்றே சொல்லலாம்..

சிங்கப்பூரில் தற்போது 20க்கும் மேற்பட்ட நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இதில் பங்கேற்கின்றன.

உணவுப் பெட்டிகளின் விலை சுமார் S$1.90 முதல் S$ 2.95 வரை இருக்கிறது.இந்த சேவைகள் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.மலிவு விலை, புதுமை, வியக்க வைக்கும் உணர்வு போன்றவற்றின் அடிப்படையில் உள்ளது.


உணவுக் கழிவுகளைத் தடுக்க ஒரு சமூக முயற்சி:

Treatsure என்ற உள்ளூர் தளம், இந்த சேவையை ஊக்குவிக்க முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் 39 உணவக மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.இதில் 23 ஹோட்டல்களும் அடங்கும். Treatsure இன் இணை நிறுவனர் ஹுவாங் டிங்சுவான் கூறியபடி, தங்கள் பயன்பாட்டில் தற்போது 1.5 லட்சம் பயனர்கள் உள்ளனர்.மேலும் இந்த ஆண்டின் முதல் பாதியில் அவர்கள் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 1.5 மடங்கு பரிவர்த்தனைகளை கண்டுள்ளனர்.

முக்கிய ஹோட்டல்களின் பங்கு:

கிராண்ட் ஹயாட் சிங்கப்பூர்: 2018 முதல் Treatsure உடன் கூட்டு.2025 ஜூன் மாதம் கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 92.2% அதிகரித்த ஆர்டர்களை பெற்றுள்ளது.

புல்மேன் ஆர்ச்சர்ட்: உணவுப் பெட்டிகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகம். இதனால் சுமார் 30% உணவு வீணாவதை தவிர்க்க முடிகிறது.

கிராண்ட் கோப்தோர்ன்: ஒவ்வொரு நாளும் சராசரியாக 2–3 மதிய உணவுப் பெட்டிகள் விற்பனையாகிறது.

வெஸ்டின் ஹோட்டல்: கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,575 “எஞ்சிய குருட்டுப் பெட்டி” வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

பேக்கரிகளும் பங்கு பெறுகின்றன:

சில பேக்கரிகள், இனிப்புக் கடைகள் மற்றும் கஃபேக்களும் இதே மாதிரியான பிளைண்ட் பாக்ஸ் சேவையை வழங்குகின்றன. Yindii எனும் மற்றொரு தளம் தற்போது 400க்கும் மேற்பட்ட வணிகர்களுடன் இணைந்துள்ளது. இது கிட்டத்தட்ட1.7 லட்சம் பயனர்களை ஈர்த்துள்ளது. இதனால் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க முடிந்துள்ளது.

சமூக ஊடகத்தின் தாக்கம்:
பல வலைப்பதிவர்கள் இதனைப் பயன்படுத்தி உயர் ரக ஹோட்டல்களில் பரீட்சைகள் செய்துள்ளனர். உணவுப் போட்டி மற்றும் வீணாக்க எதிர்ப்பு பிரச்சாரங்களில் சமூக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இம்மாதிரியான “எஞ்சிய குருட்டுப் பெட்டிகள்” என்ற இந்த புதிய நுகர்வு முறை, சிங்கப்பூரில் உணவு வீணாக்கத்தை தடுப்பதோடு, மக்கள் மலிவு விலையில் சிறந்த உணவுகளை அனுபவிக்க உதவும் ஒரு வெற்றிகரமான முயற்சியாக உருவெடுத்து வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan