முதல் 50 உணவு வகைகளின் பட்டியலில் இந்தியாவின் மசாலா ஆம்லெட்டும் இடம்பெற்றுள்ளது.
அது உணவு பட்டியலில் 22வது இடத்தைப் பெற்றுள்ளது.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கப்பட்ட மசாலா ஆம்லெட் தெருக் கடைகளில் இருந்து பெரிய உணவகங்கள் வரை விற்கப்படுகின்றன.
இந்தியாவில் மசாலா ஆம்லெட்டை விரும்பாத உணவுப் பிரியர்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.