FairPrice வவுச்சர் வென்றதாகக் கூறி மோசடி..!! சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!


சிங்கப்பூரில் FairPrice உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து FairPrice Group எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக, FairPrice பல்பொருள் அங்காடி, NTUC Income காப்பீட்டு நிறுவனம், NTUC Union மற்றும் FairPrice Loyalty ஆகியவற்றின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடி முயற்சிகள் நடைபெறுவதாகப் புகார்கள் கிடைத்துள்ளன.
மோசடிக்காரர்கள் பொதுமக்களைத் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் போலியான மின்னஞ்சல்கள் மூலம் தொடர்புகொள்கின்றனர். அப்போது, நீங்கள் FairPrice ஷாப்பிங் வவுச்சர் அல்லது பரிசுப் பொருட்களை வென்றுள்ளதாகக் கூறி நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பரிசைப் பெறுவதற்காக அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளை அனுப்புகின்றனர். அந்த இணைப்புகளைத் திறந்து தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு எண்கள், கிரெடிட் கார்டு தகவல்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை வழங்குமாறு கேட்கின்றனர்.
ஆனால், இத்தகைய அழைப்புகள் மற்றும் தகவல்கள் FairPrice Group நிறுவனத்தால் அனுப்பப்படுபவை அல்ல என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஷாப்பிங் வவுச்சர்கள் அல்லது காப்பீட்டுத் திட்டங்களைப் பெறுவதற்காக உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறும் அழைப்புகள் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை:
👉 வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் OTP எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
👉சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
👉 பரிசு அல்லது வவுச்சர் வென்றதாக வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்க்கவும்.
👉சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாகத் தொடர்பைத் துண்டிக்கவும்.
பரிசுத் திட்டங்கள், அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் விளம்பரச் சலுகைகள் உண்மையானவையா என்பதை அறிய FairPrice-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம்.
மேலும், சந்தேகங்கள் அல்லது மோசடி முயற்சிகள் குறித்து FairPrice வாடிக்கையாளர் சேவை எண்ணான 6380 5858 மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது general.feedback@fairprice.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.
மோசடிக்காரர்களின் வலையில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என FairPrice Group கேட்டுக்கொண்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
