சிங்கப்பூரில் ஒழுங்குமுறை நடவடிக்கை - ACCC முதல் முறை!!!

சிங்கப்பூர்: உள்ளூர் நிரந்தர வதிவிட விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது மூன்று குடியேற்ற ஆலோசனை நிறுவனங்கள் நுகர்வோரை கடுமையாகவும் தவறாகவும் வழி நடத்தியது.
சிங்கப்பூரின் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்(CCC) தொழில் துறை தொடர்பான நடத்தை நிறுத்த நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்தது. மேலும், போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்(CCC) ஒரு அறிக்கையில் அந்த மூன்று நிறுவனங்களின் பெயர்களையும் கூறியிருந்தது.
மூன்று நிறுவனங்களின் பெயர்களாவன:
✓பால் இமிகிரேஷன்ஸ்
✓VED இமிகிரேஷன்ஸ்
✓SAVA இமிகிரேஷன்ஸ்
இவைகளின் பின்னால் இருக்கும் முதலாளி செங் யோங் டெக் என்றும் கூறியுள்ளது.
விசாரணையில் 3 நிறுவனங்களின் வலைதளங்களிலும் உள்ளூர் நிரந்தர வதிவிடத்தை பெறுவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடுவதற்கு ஒரு படிவம் இருப்பதாகவும் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு சாத்தியமான வாடிக்கையாளர்கள் இலவச ஆலோசனை அழைப்பை பெற்றனர்.
ஆலோசனையின் போது நிரந்தர வதிவிட விண்ணப்ப விதிமுறைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதும் போட்டி கடுமையாக இருப்பதையும் கூறி, விற்பனை ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் விரைவாக விண்ணப்பிக்க ஊக்குவித்து தங்கள் சேவைகளை பயன்படுத்தினால் அவர்களை விண்ணப்பங்களுக்கு உத்தரவாதமான ஒப்புதலை வழங்குவதாக உறுதி அளித்திருந்தனர்.
ஊட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் இந்த மேலே கூறியுள்ள கூற்றுகள் அனைத்தும் ஆதாரம் அற்றவை எனவும் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கத்தோடு கொண்டவை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சேவைகளுக்கு $10,000 வரை செலுத்த வேண்டி இருக்கும் எனவும் கூறியிருந்தது.
நீதிமன்ற உத்தரவின் கீழ், செங் யோங் டெக் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை நிறுத்த வேண்டும் மேலும் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தும் ஆன்லைன் தளங்களிலும் முக்கிய உள்ளூர் செய்தித்தாள்களிலும் இந்த நீதிமன்ற உத்தரவின் விவரங்களை வெளியிட வேண்டும்.
இந்த வணிக அமைப்பு மற்றும் கட்டுப்பாடு அல்லது உரிமைகள் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு போடப்பட்டிருந்தது.
பால் இமிகிரேஷன்சின் விற்பனை நடைமுறைகள் குறித்து சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திற்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் விசாரணையை தொடங்கி விசாரணையின் போது நிறுவனத்தின் செயல்பாடுகளை முடித்துவிட்டு விதிமுறைகளை மீறுவதற்காக ஒரு புதிய நிறுவனம் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
எனவே புதிய நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஒழுங்குமுறை அதிகாரிகளை மீறி செயல்பட்ட ஒருவர் மீது முதல் முறையாக ACCC சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
