6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! 30/03/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link 6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்...!!! சிங்கப்பூர்: ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.SQ899 விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் விமானி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விமானம் புறப்பட தாமதமாகியுள்ளது.இதன் விளைவாக, விமானம் சுமார் 6 மணி நேரம் கழித்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டது.அது சிங்கப்பூரை இரவு 7.30 மணிக்கு வந்தடைந்தது. மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்...!!! பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு வவுச்சர்கள், சிற்றுண்டிகள் மற்றும் பானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.விமான நிறுவனம் தாமதத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று கூறியது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!