சிங்கப்பூரில் ஆசியாவிலேயே அதிகமான விமான எரிபொருள் கொள்முதலா!!!! வியப்பூட்டும் தகவலை முழுவதுமாக தெரிந்து கொள்ள இப்பதிவைப் படிக்கவும்.
சிங்கப்பூரில் ஆசியாவிலேயே அதிகமான விமான எரிபொருள் கொள்முதலா!!!! வியப்பூட்டும் தகவலை முழுவதுமாக தெரிந்து கொள்ள இப்பதிவைப் படிக்கவும்.
நேற்று (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) சாங்கி சரக்கு விமானப் போக்குவரத்து நிலையத்தில் அமைந்துள்ள Parcel facility வளாகத்தில் ‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் நினைவாக இயக்குநர் கிறிஸ்டோஃபர் ஓங் ஊடகத்தினரைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது: உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் சூழலில், நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய விமான எரிபொருள் தயாரிப்பில் இப்போது முதலீடு செய்யாவிடில், பின்னர் மோசமான விளைவுகள் நேரிடக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்ககூடிய எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஃபின்லாந்தின் ‘நெஸ்டே’ நிறுவனத்துடன் இணைந்து ஊடகச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்நிறுவனமானது ‘ டிஎச்எல் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு மொத்தம் 7,400 டன் (சுமார் 9.5 மில்லியன் லிட்டர்) அளவிலான விமான எரிபொருளை வழங்கும் என தெரிவித்துள்ளது.
இது ஆசியாவில் அதிகமான நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய விமான எரிபொருள் கொள்முதல் ஆகும்.
‘ டிஎச்எல் எக்ஸ்பிரஸ்’ சிங்கப்பூரில் இருந்து இயக்கும் 5 போயிங் 777 வகை சரக்கு விமானங்களின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 35 முதல் 40 விழுக்காட்டுக்கு அது சமம்.
இந்த எரிபொருளால் நிறுவனத்தின் கரிம வெளியீடு பெரிதும் குறையும் என்று திரு ஓங், எதிர்காலத்தில் பசுமை எரிபொருள்களின் விலை குறையும் எனவும் கூறியுள்ளார்.
நெஸ்டே’ நிறுவனம் குறிப்பிட்டது: பாரம்பரியமான படிம எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் பசுமை எரிபொருள்களின் கரிம வெளியீடு குறைவு என்பது மட்டுமில்லாமல் குறைவான புகைக் கரியையே அவை வெளியிடும்.
உலக அளவிலும் இது பெரிய நிலையம் ஆகும். துவாஸில் உள்ள அதன் சுத்திகரிப்பு ஆலையில் சுமார் 1 மில்லியன் டன் பசுமையான விமான எரிபொருளைத் தயாரிக்க முடியும்.
இரு நிறுவனங்களும் கடந்த ஜூலை மாதம் (2025) ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுக் கொண்டன.
சிங்கப்பூரில் உள்ள ‘ நெஸ்டே’ சுத்திகரிப்பு ஆலையில் தயாரிக்கப்படும் நீடித்த நிலையைக் கொண்டுள்ள விமான எரிபொருளைச் சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் தனது சரக்கு விமான நிலையங்களில் ‘ டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்’ பயன்படுத்தும். 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இது நடப்பில் இருக்கும்.