சிங்கப்பூரின் 60 வது தேசிய தினம் - பிறந்த பெண் குழந்தை!!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பொன்னான நாளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறக்க வேண்டிய குழந்தை ஆனால் இந்த சிறப்பான நாளில் பிறந்தது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தந்துள்ளது.
பெண் குழந்தை நள்ளிரவுக்குப் பின்னர் 12:04 மணிக்கு பிறந்தது. இந்த குழந்தைக்கு பெற்றோர் எமிலியும் ஜின் ஹூவையும் ‘Liu Xingyi’ என்று பெயரிட்டனர்.
‘Liu Xingyi’ இன்று பெயருக்கு அர்த்தம் வெளிச்சம் என்பதாகும்.
பெற்றோர் கூறியதாவது: ‘மகள் தேசிய தினத்தன்று பிறந்தது பெருமை அளிக்கிறது மேலும் எங்களுக்கு கிடைத்த சிறப்புப் பரிசு இவள்’ என்று கூறினார்.
பெண் குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளர வேண்டும் என்பதை தங்களின் விருப்பமாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணர்ச்சிபூர்வமான நாளில் பிறந்த குழந்தை ஒருநாள் சிங்கப்பூரின் நம்பிக்கை நட்சத்திரமாகும் என்றும் நாட்டிற்கும் இடிக்கும் பெருமை தேடி தரும் என்று நம்புவதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.