மருத்துவர்கள் அதிர்ச்சி..!!இளைஞனுக்கு திடீரென உடலில் நேர்ந்த வினோத மாற்றம்..!!

மருத்துவர்கள் அதிர்ச்சி..!!இளைஞனுக்கு திடீரென உடலில் நேர்ந்த வினோத மாற்றம்..!!

சீனாவின் ஜெஜியாங்கைச் சேர்ந்த 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவன், முகப்பருவுக்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொண்டதால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஸ்பைரோனோலாக்டோன் மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்தியதால் அவருக்கு மார்பக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முகப்பரு குறைந்தாலும், தொடர்ந்து மருந்தகத்தில் வாங்கி மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் ஹார்மோன் சமநிலை சீர்குலைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மார்பக வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டது. பின்னர் மருத்துவ உதவி பெற்றதும், மருந்தை நிறுத்திய பிறகு இரண்டு வாரங்களில் நிலை சீரடைந்தது.

மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகளை பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK