சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!!
சிங்கப்பூர்: தாஞ்சோங் கட்டோங் சாலை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த பிறகு பாதிப்புக்குள்ளான பகுதிகள் படிப்படியாக நாளை (2 ஆகஸ்ட்) நண்பகல் முதல் திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பொது போக்குவரத்துக் கழகம் இன்று (1 ஆகஸ்ட்) ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (26/07/2025) மாலை 5 மணி அளவில் தாஞ்சோங் கட்டோங் ரோட்டுக்கும் மவுண்ட் பேட்டன் ரோட்டுக்கும் இடையே புதை குழி ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டதையடுத்து அக்குழிக்குள் கார் ஒன்று விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இப்புதை குழி உண்டானதை தேசிய தண்ணீர் அமைப்பான PUB பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
ஒரு வாரமாக சேதமடைந்த சாலையை பழுதுபார்த்து மண்ணால் மூழ்கும் குழியை மீண்டும் நிரப்புவதன் மூலம் நிலத்தை நிலைப்படுத்த வேலை செய்துள்ளதாக PUB மற்றும் LTA தெரிவித்தது.
நிலத்தடி வெற்றிடத்தை நிரப்புவதற்கு மண், நீர் மற்றும் சிமெண்ட் கலவையே பயன்படுத்தப்பட்டது. சாலைகள் பாதுகாப்பானதாக உள்ளதா என BCA ஆலோசனையுடன் தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டு சாலைகள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ரேடார் ஆய்வுகள், நில அதிர்வு ஆய்வுகள் மற்றும் பலவீனமான தரையை ஆய்வு செய்தல் ஆகிய சோதனைகளின் அடிப்படையில் எந்த அசாதாரணங்களும் கண்டறியப்படவில்லை.
நாளை ஆகஸ்ட் 2- ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் கிழக்கு கடற்கரை பூங்கா(ECP) முதல் மவுண்ட் பேட்டன் சாலை வரையிலான தாஞ்சோங் கட்டோங் தெற்கு சாலை பிரிவு போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கும்.
மவுண்ட் பேட்டன் சாலையிலிருந்து கிழக்கு கடற்கரை பார்க்வே வரையிலான எதிர்ப்பகுதியில் , வரும் திங்கட்கிழமை (04/08/2025) காலை 5 மணிக்கு மீண்டும் தொடங்கும்.
கூடுதல் தகவலாக, ஆம்பர் சாலை மற்றும் ஆம்பர் கார்டனில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி பிப்ரவரி 2024- இல் தொடங்கியது என பொதுப் பயன்பாட்டு வாரியத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒப்பந்ததாரர் ஓஹின் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகும்.