அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..??

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..??

​உலகிலேயே முக்கியமான பணம் என்றால், அது அமெரிக்க டாலர் தான். அமெரிக்க பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால் தான் முதன் முதலில் பணம் புழங்கத் தொடங்கியது.

16-ம் நூற்றாண்டில், டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டன.
​தற்போதைய செக்குடியரசின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயிண்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில் தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின.

‘தால்’ என்றால் ஜெர்மன் மொழியில் ‘பள்ளத்தாக்கு’ என்று அர்த்தம். தால் பகுதியில் அச்சானதால், இந்த நாணயங்கள் ‘ஜோஹிம்ஸ் தாலர்’ என்றே அழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் சுருங்கி, ‘டாலர்’ என்றானது.

​ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் 1785-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

டாலரை குறிக்கும் ‘$’ என்ற சின்னம், மெக்சிகன் மற்றும் ஸ்பானிஷ் நாணயங்களை குறிக்கும் ‘P’ மற்றும் ‘S’ எழுத்துக்கள் ஒன்றிணைந்து காலப்போக்கில் உருவானதாகும்.

இன்று அமெரிக்கா மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாணயத்தை ‘டாலர்’ என்றே அழைக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய அளவுகோலாகவும், சர்வதேச நிதிக் கையிருப்பில் பெரும்பங்கு வகிக்கும் நாணயமாகவும் இது திகழ்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK