தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!!

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 70 வயதுடைய ஒருவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளிடம் இருமுறை அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

தற்போது 30 வயதுடைய அந்தப் பெண், தந்தையின் செயல்களால் நீண்ட காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, 21வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் தனது தந்தையின் தவறுகளை அம்பலப்படுத்த முடிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

1999 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் அந்த நபர் தனது சிறு வயதிலிருந்த மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக சாட்சிகள் கூறுகின்றன.

முதன்முறையாக அவள் உடல்நிலை சரியில்லாமல் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தபோது தந்தை அந்தநிலையில் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் குடும்பம் டிவி பார்த்தபோது நடந்த இரண்டாவது சம்பவம், அந்தப் பெண்ணின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

தாய் தந்தையை தடுக்க முயன்றாலும், அவர் இல்லாதபோது தந்தை தொடர்ந்து அவளைத் துன்புறுத்தினார் என்று கூறப்பட்டது.

அந்தப் பெண் 2015ல் வீட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்தில் படித்துப் 2019ல் சிங்கப்பூருக்கு திரும்பினார்.

நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் தாய், தந்தை மற்றும் மகளுக்கிடையே நெருக்கமான உறவு இருந்ததாக கூறினார்.

மேலும் அவர் தனது கணவரை “அன்பான தந்தை” என்றும் விவரித்தார். தனது கணவர் தனது மகளுக்கு தகாத முறையில் எதையும் செய்ததை தான் பார்த்ததில்லை என்றும், ஆனால் தனது மகள் சிறு வயதிலேயே சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை பெற்றதை நினைவில் வைத்திருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

நீதிபதி, பெண்ணின் சாட்சியம் நம்பகமானது என்றும், இரு சம்பவங்களும் தெளிவாகவும், உறுதிப்படையும் விளக்கப்பட்டன என்றும் மதிப்பிட்டார்.

இறுதியில், குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட அந்த நபர், செப்டம்பர் மாதத்தில் தண்டனைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், சட்டப்படி அவருக்கு பிரம்படி தண்டனை வழங்கப்படாது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan