சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!!

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீமிதி திருவிழா ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

இன்று(செப்டம்பர் 3) முதல் (செப்டம்பர் 4) இணைய பதிவுகள் தொடங்க உள்ளன.

அக்டோபர் 11ம் தேதி வரை இணையத்தில் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு நேரடியாக சென்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொள்ள முடியாது என்பதையும் இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. இணையதளத்தின் மூலமாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பால்குடம், அங்கபிரதட்சணம், கும்பிடுதண்டம், தீ மிதித்தல் ஆகிய நேர்த்தி கடன்களில் பங்கேற்பதற்கு இணையம் வழி பதிந்து கொள்வது கட்டாயம் என்று இந்த அறக்கட்டளை வாரியம் இன்று (செப்டம்பர்) 3ஆம் தேதி அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

தீமிதி திருவிழா வாரியத்தின் youtube பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan