10 வயதில் ஓபரா மேடையை கவர்ந்த சிறுமி..!!! ஓபராவை நேசிக்க காரணம்..???
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முதல் பாரம்பரிய ஓபரா விழாவில் 10 வயது சென்மெங்,ஆணாக வேடமணிந்து மேடையேறினார்.
டேட்டாங் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ‘லிம் மோ செங்’ ஓபராவில் அவரது சிறுவயது நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இது குறித்து அந்த சிறுமி பேசுகையில்,“நான் முதலில் பாரம்பரிய சீன ஓபராவைப் பார்த்தபோது, அந்த இசை, நடிப்பு, மேடையின் உணர்வுப் பூர்வம் எல்லாம் என்னை மயக்கத்தில் ஆழ்த்தியது,”என்று கூறினார்.
“ஓபரா என்பது வெறும் பாட்டு அல்ல;அது ஒரு கதையை முழு உடலும் உயிரும் சேர்ந்து சொல்வதுதான். ஒவ்வொரு பாத்திரத்தின் பாவனையும், அவை எடுத்துக்காட்டும் உணர்ச்சியும் என் மனதை தென்றலாய் தொட்டது,” என்று ஓபரா மீதான தன் ஆர்வத்தை கூறினார்.
10 வயதான சென்மெங்,தன் வயதைவிட பெரியதைப்போல பேசுகிறார். அந்த பாரம்பரிய உடையும், மேடை மேலான அந்த ஆணின் வேடமும், பாட்டில் வெளிப்படும் வீரமும், பழங்காலத்தின் கனவாகவே அவர் வாழ்கின்றார்.
“ஓபரா மூலம் நான் நானாக இல்லாமல் வேறொருவராக மாற முடிகிறது. அந்த உணர்வு எனக்கு சுதந்திரமாய் உணர்த்துகிறது,”என்று கூறுகிறார்.