சிங்கப்பூர் : பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கியதற்காக கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், மருத்துவ விடுப்பில் அவர் இருப்பதாகவும் பள்ளியின் தலைமை முதல்வர் Britta Seet கூறினார்.
ஆசிரியர் குணமடைந்து வருவதாக கூறினார். மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த மாணவர் அவரின் பெற்றோர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும் சீட் கூறினார்.