ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!

அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புடைய MQ-9 Reaper ரக ஆளில்லா ட்ரோன்களை ஏமன் சுற்றுவட்டாரத்தில் தொலைத்துள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இது போன்ற 7 ஆளில்லா ட்ரோன்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா ஏமனில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
ஒரு MQ-9 யின் விலை சுமார் 30 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
அவை எப்படி தொலைந்தன என்பது குறித்த தகவலை அதிகாரி கூறவில்லை.
கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை அடையாளம் கண்டு தாக்க MQ-9 ஆளில்லா ட்ரோன்கள் உதவுகின்றன.
இந்த நிலையில் F/A -18E போர் விமானத்தை தொலைத்து விட்டதாக அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
அந்த விமானம் சுமார் 67 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும் அது கடலில் விழுந்ததாக கூறியது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.விசாரணை நடைபெற்று வருவதாகவும் கடற்படை தெரிவித்தது.
கடலில் விழுந்த அந்த விமானம் மீட்கப்பட்டதா என்பது குறித்த தகவல் கூறப்படவில்லை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan