சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!!

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!!

RTS என்பது எல்லை தாண்டிய ரயில் சேவை பயணம் என்பதால் கோலாலம்பூரின் புது போக்குவரத்து கட்டணங்களைப் போல குறைவான விலையில் இருக்காது என்பதை மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக்கான கட்டணமானது $5 முதல் $7 க்குள் இருக்கக்கூடும். மேலும் இது ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் என்பதை உறுதி செய்துள்ளார்.

சிங்கப்பூருக்கு காரில் பயணம் செய்வதை விட இது மிகவும் குறைந்த செலவில் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

ரயில் சேவை ஆண்டு இறுதிக்குள் செயல்பட தொடங்கும் எனவும் விரைவு ரயில் சேவை கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் இருக்கும் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்துடன் இந்த வழிப்பாதை இணைக்கப்பட்டு இருக்கும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK