பாடகர் எஸ்.பி.பி உருவச்சிலை திறப்பு..!! எங்கே..??

பாடகர் எஸ்.பி.பி உருவச்சிலை திறப்பு..!! எங்கே..??

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் திருவருட்சிலையானது கேரள மாநிலம் பாலக்காட்டில் நிறுவப்பட்டுள்ளது.

இவரது பெயரில் ஒரு நினைவு பூங்காவையும் அங்கு அமைத்திருக்கின்றனர். இதனை ஏற்பாடு செய்தது சமம் என்ற அமைப்பாகும்.

சமீபத்தில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி கலந்துகொண்ட எஸ். பி. பாலசுப்ரமணியன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சித்ரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு எஸ்பிபியின் நினைவு பூங்காவை திறந்து வைத்தனர்.

இந்த மதிக்கத்தக்க மற்றும் உணர்வுபூர்வமான நிகழ்ச்சியில் எஸ்பிபி மகன் சரண் மற்றும் அவரது குடும்பத்தினர், பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பின்னணி பாடகர் விஜய் ஏசுதாஸ் இணைந்து மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக எஸ்பிபி அவர்கள் காலமானார். இந்த வரந்த தக்க செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK