விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன…??

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பங்கு என்ன...??

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்பட உள்ளது.

இதனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான தேவை 40% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

வானத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதுகுறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இலியானா நபிலா தான் வேலைக்கு வரும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

மேலும் எதிர்பாராத சவால்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.

குறிப்பாக வேகமாக மாறிவரும் வானிலையில் சற்று சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

வானிலை மோசமாக இருக்கும்போது,ஒரே நேரத்தில் 20 விமானங்களைத் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும்.

அனைத்து விமானங்களையும் பாதுகாப்பாக திருப்பிவிட மிகுந்த கவனம் தேவை. 

இந்த வேலையில் சேருவது எளிதானது அல்ல. நீங்கள் பல கடுமையான மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

வேலை நாள் தொடங்குவதற்கு முன், வானிலை நிலைமைகள், மாற்று ஏற்பாடுகள் போன்றவை அறிவிக்கப்படும். 

ஒன்றரை மணி நேர வேலைக்குப் பிறகு அரை மணி நேர ஓய்வு கட்டாயமாகும்.

அடுத்த பணிக்கு நீங்கள் அமைதியாகத் தயாராக வேண்டும். 

இருப்பினும் வேலை எவ்வளவு சவாலானது என்றாலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் பெறும் திருப்தியுடன் ஒப்பிடும்போது எதுவும் கடினமாகத் தெரியாது என்று கூறினார்.