வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!!

வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகளை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 13 இளைஞர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் வயதானவர்கள், சிறப்பு தேவை உடையோர் அல்லது உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த சக்கர நாற்காலியில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மே 1 அன்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் இதுபோன்று இரண்டு சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்தது.

இந்நிலையில் முதல் சம்பவம் குறித்து ஏப்ரல் 28 அன்று இரவு 10:55 மணி அளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது.

செங்காங் வெஸ்ட் அவென்யூவின் பிளாக் 51A வாக்குச் சாவடியாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் தேர்தல் துறைக்கு (ELD) சொந்தமான மூன்று சக்கர நாற்காலிகள் சேதமடைந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அவர்கள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியை வீசியதாக கூறப்படுகிறது.

இரண்டாவது வழக்கு மே 1 ஆம் தேதி பூன் லே டிரைவ் பிளாக் 176B இல் நடந்தது.

அங்குள்ள ஒரு கூடைப்பந்து மைதானம் வாக்குச் சாவடியாகப் பயன்படுத்துவதற்காக சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் துறைக்குச் சொந்தமான ஒரு சக்கர நாற்காலி சேதமடைந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இம்மாதிரியான பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோருக்கு $2,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் மூன்று முதல் எட்டு பிரம்படிகள் வழங்கப்படலாம்.