சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்??

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டி வென்றது யார்??

நேற்று ஜூன் 10 செவ்வாய்க்கிழமை டாக்கா தேசிய மைதானத்தில் நடைபெற்ற AFC ஆசிய கோப்பை தகுதி சுற்றில் சிங்கப்பூரும் , பங்களாதேஷும் மோதியது.

இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் பங்களாதேஷ்-ஐ வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சாங் உய்-யங் மற்றும் இக்சான் ஃபாண்டி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த தகுதி சுற்றில் சிங்கப்பூர் மூன்றாவது சுற்றில் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு நான்கு புள்ளிகளை பெற்று ஆசிய கோப்பை தகுதி பட்டியலில் முதலிடத்தையும் உலகத் தரவரிசை பட்டியலில் 161 வது இடத்தையும் கைபற்றி உள்ளது.

பங்களாதேஷ் மூன்றாவது இடத்திலும் இந்தியா கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சிங்கப்பூர் அணியானது வரும் அக்டோபர் மாதம் இந்திய அணியை சிங்கப்பூரில் எதிர்கொள்ளும்.